கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2021 ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் மூலம் துறைமுக நகரம் விசேட பொருளாதார வலயமாக நிறுவப்பட்டுள்ளது. இலங்கையை நவீனமயமாக்கல், பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்தல் மற்றும் சேவைகள் ஏற்றுமதியின் முன்னோடியாக எமது நாட்டை மாற்றுதல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக சர்வதேச ரீதியில் போட்டித்தன்மையுடன் கூடிய வர்த்தகங்களை மேற்கொள்வதற்கு இயலுமான சூழலை உருவாக்குவதற்காக கொழும்பு துறைமுக நகரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதி அல்லது கொழும்பு துறைமுக நகரத்தின் விடயதானம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சருடன் ஆலோசித்து ஆணைக்குழுவால் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களெனப் பெயர் குறிப்பிடும் வியாபாரங்களை அடையாளங்கண்டு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்காக செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதல்நிலை வியாபாரங்கள் மற்றும் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம்நிலை வணிகங்களென இரண்டு வகையாக அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த விலக்களிப்புக்கள் மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்குவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.