பிள்ளையான் உள்ளிட்ட நால்வரும் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்

284 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரும் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.வை.எம் இசதீன் முன்னிலையில் நேற்று (9)  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போதே தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுதளிப்பதாக பிரதிவாதிகள் நீதிபதி முன்னிலையில் அறிவித்துள்ளனர்.

இதனை அடுத்து வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜ சிங்கத்தின் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணைகளை அடுத்து பிரதிவாதிகள் நால்வருக்கும் எதிராக சட்ட மாஅதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா என்றழைக்கப்படும் கனநாயகம், இராணுவ புலனாய்வு உறுப்பினர் எம்.கலீல் ஆகியோரே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.