சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் தேவை என எங்கும் குறிப்பிடப்படவில்லை – ஹர்ஷ டி சில்வா

268 0

வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது,

2015 ஒக்டோபரில் இலங்கை அனுசரணை வழங்கிய 30/1 பிரேரணைக்கு மீண்டும் அனுசரணை வழங்குவதாக ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஜெனிவாவில் தெரிவித்திருந்தார். அந்த பிரேரணையில் புதிதாக யோசனைகளை உள்ளடக்காது மேலும் இரண்டு வருடங்களில் அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலப்பு நீதிமன்றம் என்ற பதம் யோசனையில் எங்கும் காணப்படவில்லை. சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் தேவை என்பதும் யோசனையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதை பதில் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறுகின்றேன். மனித உரிமைகள் ஆணையாளர் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அதிகாரியாவார். அவரால் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். அவரது அறிக்கைகள் இறைமையுள்ள ஒரு நாட்டிற்கு அழுத்தத்தை விடுக்கமாட்டாது. என தெரிவித்தார்.