உயிருக்கு அச்சுறுத்தல் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ்

111 0

தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவது தொடர்பில்  புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொது மக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிலான்  அலஸ் தெரிவித்துள்ளார்.

பொது  மக்கள் பாதுகாப்பு அமைச்சில்  இன்று (22) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோது  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அவ்வாறான அச்சுறுத்தல் இருக்கலாம். இது தொடர்பில்  எனக்கு புலனாய்வு அறிக்கை கிடைத்துள்ளது. நான் பதவியிலிருக்கும்போதே  போதைப்பொருள் கடத்தலையும்  பாதாள உலகத்தையும்  ஒழிக்க வேண்டும்.

எனக்கு அச்சறுத்தல், மிரட்டல்கள் இருந்தாலும் அதற்காக   ஒரு அடி கூட பின் வைக்கமாட்டேன்.  ஆனால்   இன்னொரு அடி முன்னே வைப்பேன்…” என்றார்.