சீனா வர்த்தக தடைகளை நீக்கும் வரை அவுஸ்திரேலிய பிரதமர் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது என எதிர்க்கட்சி கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெளிவிவகாரங்களிற்கான நிழல் அமைச்சர் சைமன் பேர்மிங்காம் இதனை தெரிவித்துள்ளார்.
சீனா விதித்துள்ள தடைகள் நீக்கப்படும் என்பது குறித்து மிகத்தெளிவாக தெரியும் வரை அவுஸ்திரேலிய பிரதமர் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடைகள் நீக்கப்படலாம் என தெளிவாக தெரிந்த பின்னரே அவுஸ்திரேலிய பிரதமர் சீனாவிற்கு செல்லவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா அவுஸ்திரேலியா குறித்த தனது உறுதிமொழிகளை கடந்தகாலத்தில் தெளிவாக மீறியுள்ளது என தெரிவித்துள்ள சைமன் பேர்மிங்காம் சீன அவுஸ்திரேலிய உடன்படிக்கையின் கீழான தனது கடப்பாடுகளை சீனா மீறியுள்ளது உலக வர்த்தக ஸ்தாபனத்திற்கான தனது கடப்பாடுகளை சீனா மீறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2020இல் இருநாடுகளிற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் மோசமாக பாதிக்கப்பட்டவேளை சீனா அவுஸ்திரேலியாவின் பார்லி மீது தடைகளை விதித்திருந்தது.