ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நாட்டுக்கு பொறுத்தமற்ற யோசனைகளை நிறைவேற்ற வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மஹிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கை படையினரால் எவ்வித தவறும் இழைக்கப்படவில்லை.
எவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை.
ஆனால், அந்த நிலைப்பாடு இன்று முழுமையாக தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம்; வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்பதாக ஜெனிவாவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
அப்படியாயின், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கி போர்க்குற்ற விசாரணைகளை முன்னெக்க இணக்கம் தெரிவித்தவர் யார் என ஜீ.எல். பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.