இந்துசமூத்திர வலய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்;டில் பங்குகொள்ள இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோகோ விடோடோவைச் சந்தித்துள்ளார்.
இந்தோனேசிய ஜனாதிபதியின் உத்தியோக பூர்வு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின் மூலம் இரு நாடுகளின் உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக இந்தோனேசிய ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க மேற்கொள்ள வேண்டிய புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவது குறித்தும் இதன்போது நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ளது.
இந்தோனேசிய மற்றும் இலங்கைக்கு இடையில் விவசாய துறையை அபிவிருத்தி செய்ய தொழிநுட்ப அறிவை பரிமாற்றிக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் குறித்து இரண்டு நாட்டு தலைவர்களும் ஆராய்ந்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.