பிணை முறி விவகாரம் தொடர்புபில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல் வெளியிடல் காரணமாக, கோப்பு குழு அறிக்கையின் மீதான மக்கள் நம்பிக்கை குறைவடைந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி இதனை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட முன்னணியின் தலைவர் ஷாந்த பண்டார, கோப் குழுவினால் இனங்காணப்படாத பல்வேறு மோசடிகள் ஜனாதிபதி அழைக்குழுவினால் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் மக்கள் எதிர்காலத்தில் எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள் எனவும் ஷாந்த பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.