தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும்

91 0

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் சபைக் கூட்டமும் மாநாடும் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்துக்கான போட்டிக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், வடமாகாண சபையின் தவிசாளரான சீ.வி.கே.சிவஞானமும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்சபைக்கூட்டமும் வருடாந்த மாநாடும் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருகின்றமை மற்றும் கட்சிக்குள் தலைமைத்துவத்திற்கான போட்டிகள் எழுந்துள்ளமை தொடர்பில் வீரகேசரியிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளைகள் தெரிவு செய்யும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, யாழ்ப்பாணம்,  திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தப்பணிகள் இன்னமும் முழுமை அடையவில்லை.

இந்த நிலையில் குறித்த பணிகள் பூர்த்தியான கையோடு நாம்,  கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிநிலைகளுக்கான விண்ணப்பங்களை கோரவுள்ளோம்.

அந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டதன் பின்னர்ரூபவ் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பதவி நிலைகளுக்கு விண்ணப்பார்களாயின் அவர்களை நேரில் அழைத்து இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தெரிவுகளை மேற்கொள்வதற்கு முயற்சிகளை எடுப்போம்.

இணக்கப்பாடுகள் எட்டப்படாதவிடத்து நாம், பொதுச்சபை உறுப்பினர்களிடையே வக்கெடுப்புக்கு நடத்தப்பட்டு புதிய நியமனங்களை செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

போட்டியில் மூவர் 

தற்போதைய நிலையில் கட்சியின் தலைமைப்பதவிக்கு மூவர் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீதரன், சுமந்திரன் மற்றும் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் தான் இவ்வாறான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றமை பகிரங்கமான விடயமாகும். அவ்வாறான நிலையில் போட்டிகளைத் தவிர்த்து இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைமை உட்பட கட்சியின் பதவி நிலைகளுக்கு நியமனங்களைச் செய்வதற்கே நான் முயற்சிக்கின்றேன். அதனடிப்படையில் அதுதொடர்பான விடயங்கள் பொதுச்சபைக் கூட்டத்துக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் முன்னெடுக்கப்படும்.

 கோரிக்கைகள் உள்ளன 

என்னைப்பொறுத்தவரையில் நான் இரண்டு தடவைகள் கட்சியின் தலைமைப்பதவியினை வகித்த நிலையில் தற்போது மூன்றாவது தடவையாகவும் தொடர்ந்து கொண்டுள்ளேன்.

ஏலவே 2019ஆம் ஆண்டு இளையவர்களிடத்தில் பதவி நிலையை வழங்குவதற்கு தீர்மானித்து நான் விலகுவதற்கு தீர்மானித்திருந்தபோதும்ரூபவ் பலரது கோரிக்கைகள் காரணமாக அப்பதவியில் தொடர வேண்டியிருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போதும்ரூபவ் இளையவர்களிடத்தில் ஒப்படைப்பதற்கே நான் விரும்புகின்றேன். இருப்பினும் என்னையும் தலைமைப்பதவியில் நீடிக்குமாறு கோருகின்ற தரப்பினர்களும் உள்ளார்கள். ஆகவே அதுபற்றி நான் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை.

கூட்டமைப்பு தீர்மானம்

இதேவேளை, கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட வேளையில் இலங்கைத் தமிரசுக்கட்சி தனியாக போட்டியிடுவதாக தீர்மானித்திருந்தது. இதில் எனது முழுமையான சம்மதமும் காணப்படாத போதும் கட்சிக்குள் பெருவாரியானவர்களின் கோரிக்கையால் அத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் எமது வருடாந்தக் கூட்டத்தொடர் மற்றும் மாநாட்டின்போது, தமிழ் மக்களின் விடயங்களை இலங்கைத்தமிரசுக்கட்சி ஏனைய அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துரூபவ் கூட்டமைப்பாக ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இதனைவிடவும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகக்கான நிரந்தரதீர்வு, உடனடிப்பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியன தொடர்பிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என்றார்.