நயீனாதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா

275 0

யாழ்ப்பாணம் நயீனாதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் ஒரு தொகுதி கேரள கஞ்சாவினை ஊர்காவற்றுறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இன்று நகாலை நயீனாதீவு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த மீனவர்கள் சிலர் கடலில் பொதியொன்று மிதந்து வருவதை அவதானித்திருந்தனர்.

இதனையடுத்து இது தொடர்பாக நயீனாதீவில் உள்ள பொலிஸ் காவலரனுக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து பொலிஸார் குறித்த பொதியை கைப்பற்றி சோதனையிட்ட போது அதனுள் கேரள கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினை பொலிஸார் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

அங்கு வைத்து கஞ்சாவினை அளவிட்டு பார்க்கும் போது அதன் நிறை 52கிலோகிராமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதன்படி இவ் கேரள கஞ்சாவின் மொத்த நிறை குறைவாகவே இருக்கும் எனவும் தற்போது கடல் நீரில் நனைத்திருப்பதால் அது கூடிய நிறையாக உள்ளதாகவும் இக் கஞ்சாவானது பழைய கஞ்சா எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த கஞ்சாவினை கடத்தி வந்தவர்கள் யாரோ கடத்தல் சம்பவம் பிடிப்படப் போகின்ற தருணத்தில் கடலில் தூக்கி வீசியிருக்கலாம் எனவும், இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.