தீர்வின்றி தொடரும் நில மீட்பு போராட்டம்

786 0

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்திலுள்ள இராணுவம் வெளியேறி தமது காணிகள் ஒப்படைக்கப்படவேண்டும் என தெரிவித்து மக்கள் முன்னெடத்து வரும் போராட்டம் இன்று எட்டாவது நாளாக தொடர்கின்றது.

கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவுக்குட்டபட்ட சீனியாமோட்டை, சூரிபுரம்,மற்றும் புலவுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை மக்கள் போராட்டத்தின் மூலம் பெற்றிருந்தனர்

இந்த நிலையில் கேப்பாபுலவில் பூர்வீகமாக வாழ்ந்த128 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே கடந்த முதலாம் திகதி போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தை தொடர்ந்து பொதுமக்கள் சொந்தநிலங்களில் இருந்து வெளியேறிய நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச படையினரால் காணிகள் கையகப்படுத்தப்பட்டிருந்தன.