கொலைக்களத்தை ஆவணப்படமாக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் லண்டன் மக்கள்

267 0

சனல் – 4 தொலைக்காட்சி எடுத்த இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மலேசிய மனித உரிமை ஆர்வலர் லீனா ஹென்றியை தண்டனையிலிருந்து காக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, லீனா ஹென்றியை தண்டனையிலிருந்து காக்கும் முகமாக லண்டனில் அறவழிப் போராட்டத்தை நடாத்த உள்ளனர்.

குறித்த போராட்டம் மலேசிய உயர்ஸ்தானிகத்திற்கு முன்பாக (Malaysian High Commission in London (45, Belgrave Square, SW1X 8QT) என்ற இடத்தில் நாளை நடைபெற உள்ளது.

மலேசிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் லீனா ஹென்றி இலங்கையின் கொலைக்களம் (பாதுகாப்பு வலயம்) என்ற ஆவணப்படத்தை மலேசியாவின் தணிக்கைப் பிரிவின் அனுமதியின்றி மலேசியாவில் திரையிட்டுக் காட்டியதாக குற்றம் சுமத்தி, இலங்கை அரசாங்கம் அலுத்தத்தை பிரயோகித்துள்ளது.

இந்த அழுத்தம் காரணமாக லீனா ஹென்றிக்கு 3 வருட சிறை வாசம் அல்லது 30,000 றிங்கிற் தண்டப்பணம் கட்ட வேண்டும் என்ற தீர்ப்பு வர இருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதை கண்டித்தும் அவரை காப்பாற்றும் முகமாகவும் “எம் வலிகளை மலேசிய மக்களுக்கு தெரியப்படுத்த முனைந்த லீனாவுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை” என்றும் தெரிவித்து குறித்த போராட்டத்தை லண்டன் மக்கள் முன்னெடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.