கெசினோவிற்கு இலங்கையில் அனுமதியில்லை – ரணில்

670 0

ranil_15கெசினோ தொடர்பான எந்தவொரு முதலீடுகளுக்கும் இலங்கையில் அனுமதியில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திகாக கெசினோ வர்த்தகத்தை ஊக்குவிப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கப்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில், கெசினோ வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டமை குறித்து இந்த நிகழ்வில் வைத்து வர்த்தகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் வழங்கிய பிரதமர் புதிதாக எந்தவொரு கெசினோ வர்த்தகருக்கு அனுமதி வழங்க போவதில்லை என சுட்டிக்காட்டினார்.