அது பிரகாசமான ஒரேஞ் ஒளியை போல காணப்பட்டது வருடத்தின் முதல் சூரிய ஒளியை போல தோன்றியது என்கின்றார் சடே கசோகா அமெரிக்கா ஜப்பானின் ஹிரோசிமா நகர் மீது பயன்படுத்திய முதலாவது அணுகுண்டு வீசப்பட்ட தருணத்தை அவர் அவ்வாறு நினைவுகூர்ந்தார்.
அவருக்கு தற்போது 90 வயது – இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதி தருணங்களில் ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற அந்த தாக்குதலை அவர் இன்னமும் நினைவில் வைத்திருக்கின்றார்.
சடே அன்று தனது பேத்தியாருடன் வீட்டில் தனியாகயிருந்தார்.அந்த வெடிப்பு இடம்பெற்றவேளை அவர் அந்த வெடிப்பின் பெரும் சக்தியால் சுவரை நோக்தி தள்ளப்பட்டார்,உடைந்த கண்ணாடிகளால் மூடப்பட்டார்.
பின்னர் இருவரும் வான்வெளி தாக்குதலில் இருந்து தப்புவதற்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பிடங்களை நோக்கி சென்றனர்.
1945 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி இடம்பெற்ற சம்பவங்களை நினைகூறும்போது சிறிது நேரம் அமைதிக்கு பின்னர் அவர் நடுங்கும் குரலில் பேசுகின்றார்.
முழு நகரமும் தீப்பிடித்து எரிகின்றது என அயலவர்ஒருவர் சொன்னார் என்கின்றார் அவர்.
பல மணித்தியாலங்களாக அவரது பெற்றோர்கள் உயிர்பிழைத்தனரா என்பதை அறிய முடியாத நிலையில் அவர் காணப்பட்டார்,அவரது தந்தையை வீட்டிற்கு கொண்டுவந்தவேளை அவர் உயிருடன் இருந்தார்,ஆனால் அடையாளம் காணமுடியாதபடி முற்றிலும் எரியுண்ட நிலையி;ல காணப்பட்டார்.
அவர் முற்றிலும் கருப்பாக காணப்பட்டார் அவரது கண்கள் வெளியே வந்தன அவரது குரலை வைத்தே நான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன் அவர் குடிக்க தண்ணீர் தாருங்கள் என கேட்டதுடன் அம்மாவை போய் தேடுங்கள் என தெரிவித்தார் என சடே
சிலர் அப்பாவிற்கு தண்ணீர் கொடுக்கவேண்டாம் என தெரிவித்தனர் நான் தண்ணீர் கொடுக்கவில்லை அதற்காக பின்னர் கவலைப்பட்டேன் என சிறிது இடைவெளியின் பின்னர் சடே தெரிவித்தார்.
இரண்டு நாட்களின் பின்னர் தந்தை உயிரிழந்தார்,மறுநாள் தாயும் கொல்லப்பட்டமை தெரியவந்ததுஏனையவர்களுடன் அவருடைய உடலும் தகனம் செய்யப்பட்டது.
அன்றைய தினம் யுரேனியம் குண்டினால் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அறிந்துகொள்ள முடியவில்லை.
1945ம் ஆண்டு முடிவிற்குள் ஹிரோசிமாக நகரின் 350000 பேரில் 150,000 பேர் உயிரிழந்தனர் என ஹிரோசிமா அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.அவர்கள் அணுகுண்டுவெடிப்பினாலோ அல்லது கடுமையான கதிர்வீச்சு காரணமாகவோ அவர்கள் உயிரிழந்தனர்- அனேகமானவர்கள் பொதுமக்கள் .
ஆகஸ்ட் 9 ம் திகதி ஹிரோசிமாவிலிருந்து 400 கிலோமீ;ற்றர் தொலைவில் உள்ள நாகசாகியில் பாரிய புளுட்டோனியம் குண்டுவீசப்பட்டது. 1945 டிசம்பரிற்குள் மேலும் 75000 பேர் உயிரிழந்தனர் என அணுவாயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பி;ரச்சார அமைப்பு தெரிவிக்கின்றது.
பொதுமக்கள் மீது வீசப்பட்ட முதலாவதுயும் கடைசியுமான அணுக்குண்டுகள் அவை – ஹிரோசிமா நாகசாகி தாக்குதல்கள் மனித வரலாற்றில் இடம்பெற்ற தனித்துவமான பயங்கரமான தருணங்களாக கருதப்படுகின்றன.
எனினும் நாடுகள் அணுவாயுத திறனை அதிகரித்துவருகின்ற – உக்ரைன் ரஸ்யா தொடர்பில் அணுவாயுத யுத்தமொன்றிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேசப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் அந்த தவறு மீண்டும் இழைக்கப்படுவதை தடுப்பதற்காக மனித குலம் போதுமான அளவு செயற்படவில்லை எனபலர் கருதுகின்றனர்.
ஜி 7 உச்சமாநாடு ஹிரோசிமாவில் இடம்பெறுகி;ன்ற நிலையில் அணுகுண்டுதாக்குதலில் இருந்து உயிர்தப்பியவர்கள் அணுவாயுத யுத்தத்தின் விளைவுகள் எவ்வளவு மோசமானவை என்பதை உலக தலைவர்களிற்கு எடுத்துச்சொல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கருதுகின்றனர்.
ஹிரோசிமாவை அணுகுண்டுதாக்கியவேளை டொசிகோ டனாகா அந்த நகரிலேயே வாழ்ந்தார்.
அணுகுண்டு வெடிப்பால் தனது ஆறுவயதில்அவர் எரிகாயங்களையும் கதிரியக்கபாதிப்புகளையும் எதிர்கொண்டார்.
இன்று ஊன்றுகோலுடன் நடந்தாலும் அவர் சிறந்த உடல்நிலையுடன் காணப்படுகின்றார்.
எனினும் அன்றைய நாளின் நினைவுகள் என்றும் அவரின் மனதில் அழியாமலிருக்கும்.
அன்றைய நாள் ஒரு பாடசாலை நாள் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தவேளை தலைக்கு மேலே விமானமொன்றை அவரும் அவரது நண்பர்களும் பார்த்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
யாரோ எதிரி என சத்தமிட்டார்கள் டோசிகோ வானத்தை பார்த்தபோது வெளிச்சமொன்றை பார்த்தார்.
தனது வலதுகையை பயன்படுத்தி தான் உடனடியாக முகத்தை மூடிக்கொண்டிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்,அன்றிரவு எனக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது எனக்கு பெரிதாக எதுவும் நினைவில் இல்லை நான் சுயநினைவிழந்தேன் என அவர் தெரிவித்தார்.
அணுகுண்டு தாக்குதல்இடம்பெற்ற மறுநாள் உடல்கள் எரியூட்டப்படுவதால் எழுந்த வாடை இ;ன்றும் அவரின் நினைவில் உள்ளது.
இறந்தவர்களின் உடல்களை அதிகாரிகள் தகனம் செய்ய ஆரம்பித்திருந்தனர்.
நான் கடும் அதிர்ச்சியில் சிக்குண்டேன் எனது பாடசாலை நண்பர்கள் எல்லாம் பல வருடங்களிற்கு முன்னர் இறந்துவிட்டனர் என்னால் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க கூட முடியவில்லை என அவர் தெரிவித்தார்.
தனது 70 வயதில் அவர் மனிதாபிமான அமைப்பொன்றின் அழைப்பில் சுற்றுப்பயணமொன்றிற்கு சென்றார் அணுகுண்டுவெடிப்பில் உயிர்தப்பியவர்களை உலக நாடுகளிற்கு அழைத்து சென்று அவர்களின் அனுபவங்களை பகிரச்செய்வதற்கான முயற்சியிது, அதன் பின்னர் நான் பகிரங்கமாக எனது அனுபவங்களை தெரிவிக்கவேண்டு;ம் என தீர்மானித்தேன் என்கின்றார் அவர்.
மனித குலத்திற்கு அணுவாயுதங்கள் எவ்வளவு தூரம் ஆபத்தானவை அவைகள் வார்த்தைகளால்சொல்ல முடியாத துயரங்களை ஏற்படுத்துகின்றன என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டு;ம் என்கின்றார் தனாகா.
எங்கள் தலைவர்கள் ஹிரோசிமாவில் என்ன நடந்தது என்பதை பார்க்கவேண்டும்,குண்டுவீசப்பட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு நண்பர்களிற்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதை உணரவேண்டும் என்கின்றார் அவர்.
அல்ஜசீரா
ரஜீபன்