விவாதத்தை நேரில் பார்வையிட அனுமதி வழங்குங்கள் ; ஜனக ரத்நாயக்க கோரிக்கை

106 0

தனக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விவாதத்தை நேரில் பார்வையிட அனுமதி வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்காக மின்சாரத்துறை அமைச்சர் முன்வைத்த குற்றப்பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த விவாதத்தை தானும் தனது இரு பிள்ளைகளும் நேரில் பார்வையிட அனுமதி வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம்  கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.