வடக்கு மாகாணத்தின் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை (19) நண்பகல் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.