இலங்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சி

380 0

sri-lanka-EU-flags-720x480இலங்கை பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பெல்ஜியம் பிரசல்ஸில் நடைபெற்ற இலங்கை  – ஐரோப்பிய ஒன்றிய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 20 வது சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசுபிக் வலய வெளிவிவகார சேவைகள் பணிப்பாளர் குணா விகாண்ட் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வராவும் கலந்து கொண்டார்.
தற்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே நல்லுறவு காணப்படுகின்றது.
இதனை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் மேலும் ஆராயப்பட்டுள்ளது.