உக்ரேன் மீது ரஷ்யா நேற்றிரவு ஏவிய 30 ஏவுகணைகளில் 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் கூறியுள்ளது. எனினும், திட்டமிடப்பட்ட அனைத்து இலக்குகளும் அழிக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யா முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையான ஏவுகணைகளை கியீவ் நகரம்மீது நேற்றரவு ஏவியது என உக்ரேன் கூறியுள்ளது.
தரை, கடல், வானிலிருந்து 30 சீர்வேக ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதகாவும், இதனால் ஒருவர் உயிரிழந்ததாகவும் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தள்ளது.
இவற்றில் 29 ஏவுகணைகளை உக்ரேனிய வான் பாதுகாப்பு படைப்பிரிவினால் அiழிக்கப்பட்டதாகவும் அவ்வமைக்சு தெரிவித்துள்ளது.
எனினும், நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களில், அனைத்து இலக்குகளும் அழிக்கப்பட்டன என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரேனியப் படையினரின் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் இத்தாக்குதல்களில் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.