உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ( காணொளி )

511 0

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் போரின் போது உயிரிழந்த மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைந்துள்ள இடத்தில் சுடர் ஏற்றி மலர் தூவி உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை போரில் உயிரிழந்த மக்களுக்கான பிதிர்கடனும் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது இறுதி போரில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிதிர்கடன் எனப்படும் நீர்த்தார் சடங்கினை கப்பலடி கடற்கரையில் அச்சகர்களால் நடத்தப்பட்டுள்ளது இதில் மக்கள் கலந்து கொண்டு உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்மா சாந்தி சடங்கினை மேற்கொண்டு முள்ளிவாய்க்கால் கப்பலடி கடலில் கரைக்கும் சம்பிரதாயங்களையும் மேற்கொண்டுள்ளார்கள்.

இறுதி போரில் உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபி இடத்தில் பொதுச்சுடரினை இறுதி போரில் தனது கணவன் உள்ளிட்ட 13 சொந்தங்களை பலிகொடுத்த பொன்னுசாமி வினித்த என்ற பெண் ஏற்றிவைக்க தொடர்ந்து மதகுருமார்கள்,மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளனர் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் முள்ளிவாய்கால் பேரவல அறிக்கை வாசித்து வைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து உயிரிழந்த மக்கள் நினைவாக மக்கள் சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தியள்ளார்கள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயிரிழந்த மக்களின் உறவினர்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித சின்னப்பர் ஆலயத்தில் போரில் உயிரிழந்த மக்களுக்காக இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அருட்தந்தையின் முன்னிலையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளதுடன் ஆலுய வளாகத்தில் மைக்கப்பட்ட கல்லறைகளில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.