அவுஸ்திரேலியாவின் அவுக்கஸ் அணுசக்தி நீர்மூழ்கி திட்டம் தேவையற்றது – சீனா

94 0

அவுக்கஸ் அணுசக்தி நீர்மூழ்கி திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதுவர் சியா சியான் அவுக்கஸ் கடினஉழைப்பாளிகளான  அவுஸ்திரேலிய மக்களின் வரிப்பணத்தை தேவையற்று செலவுசெய்யும் திட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பல தசாப்தகால பாதுகாப்பு திட்டம் பெருமளவு பணத்தை பயன்படுத்தும் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதுவர் இந்த பணத்தை உட்கட்டமைப்பு வாழ்க்கை செலவை குறைத்தல் அவுஸ்திரேலிய மக்களிற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குதல் போன்றவற்றிற்காக பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீன தூதரகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் இருநாடுகளிற்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளில் மேலும் முன்னேற்றம் சாத்தியம் ஆனால் அதற்கு பரஸ்பர மரியாதை அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து மரங்களை இறக்குமதி செய்வதை வியாழக்கிழமை முதல் சீனா ஆரம்பிக்கும் எனவும் அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் ஹிரோசிமாவில் ஜி7  நாடுகளின் உச்சிமாநாட்டை நடத்தவுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள சீன தூதுவர் இரண்டாம் உலகப்போரில் தோல்வியடைந்த ஜப்பான் இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பை பாதுகாப்பது குறித்து கருத்து தெரிவிப்பது முரணாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.