இலங்கையை சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு பாரப்படு;த்தவேண்டும் என பிரிட்டனின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் 14 வருடத்தை குறி;க்கும் விதத்தில் விடுத்துள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை பிரிட்டன் நடைமுறைப்படுத்தவேண்டும், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளாh.
பிரிட்டிஸ் அரசாங்கத்தை தமிழர்களுடன் இணைந்துநிற்குமாறும் இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.
இந்த வகை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்திற்கான தாகத்தை முன்னோக்கி நகர்த்தவேண்டும் என்பதை முள்ளிவாய்க்கால் நினைவூட்டி நிற்கின்றது என தெரிவித்துள்ள டேவிட் லம்மி பிரிட்டனிலும் உலகிலும் உள்ள சமூகங்களுடன் இணைந்து இலங்கையில் உள்ள மக்களிற்கு சமாதானம் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.