நீட் தற்கொலைகளை தடுக்கமாணவர்கள், பெற்றோருக்கு தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த 2 ஆண்டுகளாக நீர் தேர்வை ரத்து செய்யஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது.
நீட் தேர்வால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் தனுஷ், அரியலூர் மாணவி கனிமொழி, வேலூர் மாணவி சவுந்தர்யா வரிசையில், தற்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை சேர்ந்த, நீட் தேர்வு எழுதிய மாணவர் பரமேஸ்வரன் தூக்கிட்டுதற்கொலை செய்துள்ளார்.
மன தைரியம் படைத்த மாணவ,மாணவிகள்கூட, ஏமாற்றப்பட்டு விட்டோமே என்ற மன உளைச்சல், மருத்துவக் கனவு பலிக்காதோ என்ற கவலை, நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தால் பெற்றோருக்கு நிதிச் சுமைஏற்படுமோ என்ற சங்கடம் ஆகியவற்றால் மன அழுத்தத்துக்கு உள்ளாகி, விபரீத முடிவுகளை எடுக்கின்றனர்.
நீட் தேர்வை எதிர்கொள்ள பல வழிமுறைகளும், வாய்ப்புகளும் உள்ளன. மேலும், மருத்துவம் சாராத பாடப் பிரிவுகளும் பல உள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதி, மிக உயர்ந்த அரசுப் பதவிகளை அடையும் வாய்ப்புகளும் உள்ளன.
வாழ்வில் வெற்றி பெற இதுபோல எண்ணிலடங்கா வழிகள்இருக்கும் நிலையில், இதுபோன்ற விபரீத முடிவகளைமாணவர்கள் எடுக்க வேண்டாம்.
இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்கள், பெற்றோரிடம் ஏற்படுத்தவும், நீட் தேர்வை ரத்துசெய்யவும், தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.