மெல்பேர்னின் மேற்குபகுதியில் இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில் சிக்கிய மாணவர்களின் அவயங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பேருந்தின் மீது பின்னால் வந்த டிரக்மோதியது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ்போர்ட் ஆரம்ப பாடசாலையிலிருந்து 45 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.சந்தியில் வலதுபுறம் திரும்பும்போது பின்னால் வந்த டிரக் மோதியதில் பேருந்து கவிழந்ததில் மாணவர்கள் பலர் கடும் காயங்களிற்குள்ளானார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டிரக்சாரதிக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றவர்கள் மிகவும் பயங்கரமான காட்சிகளை எதிர்கொண்டனர் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த நிலையில் பேருந்து சாரதி மாணவர்கள் பலரை காப்பாற்ற உதவினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியால் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் தம்மை இணைத்துக்கொண்டனர் என தெரிவித்துள்ள காவல்துறையினர் மாணவர்களிற்கு ஏற்பட்ட காயங்கள் அவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடியவை எனவும் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய ஒன்பது மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள ரோயல் சிறுவர் மருத்துவமனை அவர்கள் அனைவருக்கும் தீவிரசத்திரகிசிச்சை அவசியம் என குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் சிக்குண்டுள்ள மாணவர்கள் பலவகையான அதிர்ச்சி தரும் காயங்களிற்குள்ளாகியுள்ளனர் சிலருக்கு கைகள் ஒரளவு முறிந்துள்ளன சிலருக்கு முற்றாக முறிந்துள்ளன மருத்துவமனையின் பிரதான நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்,பலருக்கு மூட்டுப்பகுதிகள் நொருங்கியுள்ளன தலை உட்பட உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன மூவர்முதுகெலும்பு காயங்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து முதல் 11 வயதிற்குட்பட்ட மாணவர்களே காயமடைந்துள்ளனர்.