யுத்த குற்ற விசாரணையின் ஒரு அங்கமே – காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் – மஹிந்த

467 0

150817142932_mahinda_rajapaksha_512x288_getty_nocreditசட்டமூலம் ஒன்றின் ஊடாக உருவாக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் யுத்த குற்றவிசாரணை பொறிமுறையின் ஒரு அங்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றிலே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டையும், இனத்தையும், முப்படையினரையும் காட்டிக் கொடுக்கின்றமைக்காக மக்களிடம் பொறுப்பு கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அலுவலகம் இராணுவத்தை வேட்டையாடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இது உள்நாட்டு நீதிக்கமைய செயற்படபோவதில்லை.
நாடாளுமன்றத்தின் சுயாதீன நிறுவனமாக செயற்படவுள்ள இந்த அலுவலகம் நாட்டிலுள்ள ஏனைய நிறுவனங்களுக்கு தாக்கம்செலுத்துகின்ற சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக செயற்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.