ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.
கடந்த வியாழக்கிழமை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டம் ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும் இடமபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில் அதிகார பரவலாக்கம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன கடந்த கூட்டததில், எஞ்சியுள்ள ‘அரசியல் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும், காணி சுவீகரிப்பு நிறுத்தப்பட வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில் உறுதியளிக்க வேண்டும்,
இந்த இரண்டு மாகாணங்களுக்கும் சிறப்பு பொருளாதார அந்தஸ்து வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழ் தலைமைகள் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையிலேயே குறித்த பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.