முள்ளி வாய்க்கால்
நினைவுகளின் பதிவுகள்
மனத்திரையில் காட்சியாய் விரிகின்றது..
கந்தகத் தீ மூட்டி எரித்த
வன்னிமண்ணில்
இன்றும் கந்தக வாசம்
வாசம் செய்கிறது..
இனவெறித் தீயின்
நீறு பூத்த நெருப்பு
ஆங்காங்கே
புத்தவிகாரைகளாக
எழுகின்றது..
அகழ்வாராட்சியின்
அகழ்வில்
சிவன்.. புத்த தூண்களாக
மாறுகின்றான்..
தமிழர் வழிபட்ட
ஆதிக் கோவில்களில்
திடீரென புத்த சின்னங்கள்
தோன்றுகின்றன..
இதுவும் ஒருவகை
ஊடுருவல்தான்..
ஒட்டகம் கால்வைத்த
கதைதான்..
நாளைய அரசியலில்
தமிழர் ஒரு குழுக்கள்
எனக்காட்டும்
முன்னேற்பாடுகள்
இவையாகும்..
இது..
நோகாமல்
உலகக் கண்களுக்கு
திரையிட்டு மூடி
கருவறுக்கும் செயலாகும்..
இன்னும்
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு
தொடர்கின்றது..
“கந்தகத் தீயில்லாமல்”
-அகரப்பாவலன்-