தமிழ் தேசிய மக்கள் முன்னணிகட்சி அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலை நீதி கோரி படுகொலையினை சித்தரிக்கும் உருவம் தாங்கிய வாகன ஊர்திப் பவனி ஞாயிற்றுக்கிழமை (14) அம்பாறை வீரமுனையில் படுகொலை செய்யப்பட்ட நினைவு தூபியில் இருந்து ஆரம்பித்துள்ளது.
மே 18 முள்ளிவாய்க்கால் இன படுகொலையின் 14 வது நினைவேந்தலையிட்டு தமிழின படுகொலை நீதி கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இனப்படுகொலையை சித்தரிக்கும் உருவம் தாங்கிய வாகன ஊர்தி பவனி அம்பாறை வீரமுனை கோவிலில் 1990 ம் ஆண்டு தமிழர்கள் 175 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தூபில் இன்று சுடர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி ஊர்தி ஊர்பவனியை ஆரம்பித்தனர்.
இந்த ஊர்திபவனி அங்கிருந்து மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அமைக்ப்பட்ட நினைவு தூபியை சென்று அங்கு சுடர் ஏற்றி அதனை தொடர்ந்து மட்டு சத்திருக்கொண்டான் படுகொலை செய்யப்பட் நினைவு தூபிக்கு சென்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி செங்லடி வாழைச்சேனை ஊடாக வாகரையை சென்று அங்கிருந்து இன்று திருகோணமலையை சென்றடையவுள்ளது.
இந்த ஊர்திபவனி திங்கட்கிழமை (15) திருகோணமலையில் இடம்பெற்ற தமிழின படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை நினைவு தூபிகளை சென்று அஞ்சலி செலுத்தி 18ம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடைய உள்ளது.