இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பை வெளிநாட்டிலிருந்து வழிநடத்தும் பம்மா குழுவின் முக்கிய உறுப்பினரான பெண்ணொருவரை ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதில் அவர் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை சந்தேக நபரின் கணவரின் தம்பியான விக்னேஷ் என்ற நபரே அனுப்பி வைத்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது.
விக்னேஷ் என்பவர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ என்ற பம்மா குழுவின் முக்கிய உறுப்பினராவார்.
அத்துடன் சந்தேக நபரின் கணவர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தபோது கரையோரப் பொலிஸ் நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.