பார்வை போகும்
இடங்களிலெல்லாம்
நெல்மணிகள்
நிறைஞ்ச மனசோடு
காட்சி தருமே!
ஆவினங்கள்
பாலைச் சொரிந்து
பாலாறு ஓடுமே!
இரணைமடுக் குளத்தில்
குடிகொண்ட மீன்கள்
மகிழ்வோடு துள்ளிப்பாயுமே !
குயிலினங்கள் பூபாளம் பாடி
விடியலை வரவேற்குமே!
பார்க்கும் இடமெல்லாம் இயற்கைத் தாய்
பூச்சுடி போட்டு வைத்து
பெருமிதமாய் நிற்பாளே!
களமேட்டில் நெல்லு மூட்டைகள்
மலைபோல் குவிந்திருக்குமே!
இன்னும் எத்தனை எத்தனை செழிப்புகள்..
சோற்றுக்கா பஞ்சம்!
நீருக்கா பஞ்சம்!
வந்தாரை வாழவைத்த
அந்தப் பூமியில்தான்
அன்று பசித்தீ பற்றியது..
போரின் கொடுமைகள்
தலைவிரித்தாடிய நேரம்..
சோற்றுப் பருக்கைகள் நிரம்பவில்லை
கந்தக அணுக்களே நிரம்பியிருந்தது..
குஞ்சுகள்,சிறியோர்
பெரியோர்,முதியவர்
கர்ப்பணிகள்,பெண்கள்
எல்லோர் கண்களும் தேடியது
ஒருபருக்கைச் சோற்றைத்தான்..
பார்க்கும் இடமெங்கும் பிணங்கள்
காக்கைகளின் விருந்தாக
தமிழரின் சடலங்கள்..
பசி..பசி..பசி..
அப்பொழுதுதான்
இருக்கின்ற அரிசிகளைக் கொண்டு
இலை குழைகளைக் கொண்டு
ஓர் காஞ்சி உருவானது..
காச்சிய கஞ்சியைப் பெற
வரிசைகள் நீண்டது..
முதியோர்க்கும்,சிறியோர்க்கும்
முன்னுரிமை வழங்கப்பட்டது..
அந்த ஒரு குவளை கஞ்சிக்காக
ஏங்கிய மனத்துடன்
வரிசை நகர்ந்தது..
அப்பொழுதான் அந்தக் கொடூரம் நிகழ்ந்தது..
பேரதிர்ச்சியுடன் குண்டு வீழ்ந்து சிதறியது..
பசித்தீயை ஆற்ற நினைத்த
குஞ்சுகளும்,முதியவரும்
சிதறியே தாய்மண்ணில் பரவினர்..
வந்தாரை வாழவைத்த பூமியில்
நடந்தேறியது இனவழிப்பின்
உச்சத்தாண்டவம்..
சிங்களத்தில்
குண்டு போட்ட
வானோடிக்கு வழங்கப்பட்டது
சிறப்புப்பரிசு..
நம்மிடமும் விண்கலம் இருந்தது
நினைத்திருந்தால்..
சிங்களமே அழிந்திருக்கும்..
நாம் போரிட்டது தேச விடியலுக்காக..
மக்களை அழிப்பதற்காகவில்லை
மனிதாபிமானம்
மக்களையும் காக்கும்..
இனவெறியரையும் காக்கும்..
நாம் இனவெறியர் அல்லவே!
பலத்தை வளர்க்கும்
பாதையில் செல்வோம்
தமிழீழம் காண்போம்.
-அகரப்பாவலன்-