சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 25-வது இடம்

290 0

சர்வதேச அளவில் பொருளாதார காரணிகளில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 25 வது இடம் கிடைத்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் தொடர்பான உள்நாட்டு உற்பத்தி, மக்கள்தொகை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், சர்வதேச அளவில் சிறந்துவிளங்கும் நாடுகளின் பட்டியலை, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழகம் மற்றும் பிஏவி கன்சல்டிங் நிறுவனத்துடன் ஆகியவை இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் 36 நாடுகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவுக்கு 25-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருப்பதால், உள்நாட்டு உற்பத்தியில் சிறந்த காரணியாக இருக்க முடிவதாக கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனி நபர்கள் சார்ந்த உற்பத்தி ஆகியவறிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.