ஜப்பானில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணத்துடனேயே நேற்றையதினம் வடகொரியா நான்கு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
குறித்த ஏவுகணைகளை ஜப்பானிய கடற்பரப்பில் வீழ்ந்து வெடித்தன.
இவை ஜப்பானில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்களை இலக்கு வைத்து அனுப்பப்பட்டவை என்று வடகொரியாவின் அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை வடகொரியாவின் நேற்றைய ஏவுகணை சோதனை முயற்சியானது, பிராந்தியத்துக்கு ஏற்பட்டுள்ள புதிய மட்ட அச்சுறுத்தல் என்று ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வடகொரியா மேலதிக பொருளாதார தடைகளை எதிர்நோக்கியுள்ளது.
ஏற்கனவே வடகொரியா பாரிய அளவான பொருளாதார தடைகளுக்கு உள்ளாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.