அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நாகவத்தை தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் சனிக்கிழமை (13) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குளவிக் கொட்டினால் பாதிக்கப்பட்டவர்களில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக தற்போது மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை செடிக்குள் இருந்த குளவிக்கூடு கலைந்ததனாலேயே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இவர்கள் இலக்காகியுள்ளனர்.