சிறந்த புனைக்கதைக்காக 2023-ம் ஆண்டுக்கு பார்பரா, ஹெர்னானுக்கு புலிட்சர் விருது

119 0

சிறந்த புனைக்கதைக்காக பார்பரா கிங்ஸ்லோவர் மற்றும் ஹெர்னான் டையஸ் ஆகியோருக்கு புலிட்சர் விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகம், இலக்கியம், இசை போன்ற 21 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இது மிக உயரிய விருதாக மதிக்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த விருதுகளை வழங்குகிறது. ஹங்கேரியைச் சேர்ந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவர் நிறுவியதுதான் புலிட்சர் விருது. கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு ஜோசப் புலிட்சர் வழங்கிய தொகையில் இருந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 1917-ம் ஆண்டு முதல் புலிட்சர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அதில், பார்பரா கிங்ஸ்லோவர் எழுதிய ‘டெமன் கூபர்ஹெட்’ என்ற நாவல் மற்றும் ஹெர்னான் டையஸ் எழுதிய ‘ட்ரஸ்ட்’ என்ற நாவலுக்கு புலிட்சர் விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சனாஸ் டூசி எழுதிய ‘ஆங்கிலம்’ என்ற ஓரங்க நாடகம், ஜெபர்சன் கோவி எழுதிய ‘சுதந்திரத்தின் ஆதிக்கம்: கூட்டாட்சி அதிகாரத்துக்கு வெள்ளை எதிர்ப்பின் சாகா’ என்ற வரலாற்று நூல், பெவர்லி கேஜ் எழுதிய ‘ஜி-மேன் என்ற சுயசரிதை நூல், கார்ல் பிலிப்ஸ் (ஃபாரர், ஸ்ட்ராஸ் மற்றும் ஜிரோக்ஸ்) எழுதிய “பின்னர் தி வார்: மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் நூல், பொது புனைகதை பிரிவில் ராபர்ட் சாமுவேல்ஸ் மற்றும் டோலூஸ் ஒலோருன்னிபா எழுதிய ‘அவரது பெயர் ஜார்ஜ் பிலாய்ட்: ஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் இன நீதிக்கான போராட்டம்’, இசை பிரிவில் ரியானான் கிடன்ஸ் மற்றும் மைக்கேல் ஏபெல்ஸ் எழுதிய ‘ஓமர்’ ஆகியவை புலிட்சர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.