திருப்பதியை விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க முடியாது – மத்திய அமைச்சர் அறிவிப்பு

425 0

20-1440061917-1-tirupati-temple-600திருப்பதி திருமலையை ‘விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி’ என அறிவிக்க முடியாது என்று டெல்லி மேல்-சபையில் விமான போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநில அரசு திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ள திருமலை பகுதியை பாதுகாப்பு கருதி ‘விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி’ என அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதற்கு டெல்லி மேல்-சபையில் மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பதில் அளித்து பேசினார்.

“திருப்பதி விமான நிலைய பகுதியில் உள்ள தனித்தன்மையான கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு ஒரு ஓடுபாதையில் மட்டுமே விமானங்களை இயக்கும் வகையில் ஏற்கனவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என்பது போன்ற கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தால் அந்த முக்கியமான விமான நிலையத்தை அணுகும் வாய்ப்புகள் மேலும் குறைந்துவிடும்.

எனவே திருப்பதி திருமலை பகுதியை விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வாய்ப்புகள் இல்லை” என்றார்.