கம்பளை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) முதல் காணாமல் போயிருந்த யுவதியை, தான் கொலை செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கம்பளை வெளிகல்ல, எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற 22 வயது யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) முதல் காணாமல்போயுள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (12) அவர் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கைதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
மேலும், யுவதியின் காலணி, தண்ணீர் போத்தல் என்பனவும் அந்த பகுதியில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், காணாமல் போயிருந்த யுவதியை தான் கொலை செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கம்பளை பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதுடைய பாத்திமா முனவ்வரா என்ற யுவதி தனது பணியிடத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் 24 வயதான சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
யுவதியை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொலைசெய்துவிட்டு புதைத்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.