மொனராகலை, தனமல்வில பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ காட்டை அண்டிய பகுதியில் பயிரிடப்பட்டு உலர வைக்கப்பட்டிருந்த 72 கிலோ 150 கிராம் கொண்ட கஞ்சாவை நேற்று (11) இரவு விசேட அதிரடிப்படையினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாந்தோட்டை விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து சம்பவதினமான நேற்று இரவு 7 மணி அளவில் குறித்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டனர். இதன் போது அங்கு படங்கில் உலரவிடப்பட்டிருந்த 72 கிலோ 150 கிராம் கஞ்சாவை மீட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.