யேர்மனியில் டுசில்டோர்வ் நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ராட்டிங்கன் அடுக்கமாடிக் குடியிப்பில் குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பில் 10 தீயணைப்பு வீரர்கள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததனர்.
காயமடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடுக்குமாடி ஒருவர் துன்பப்படுவதாக அவரச அழைப்பு அதிகாரிகளுக்கு வந்தது. அதிகாரிகள் உள்ளே சென்றபோது அறையில் தீ எரிவதைக் கண்டனர். இதற்கிடையில் சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி நபர் ஒருவர் ஏதோ ஒன்றை வெடிக்க வைத்துள்ளார்.
கட்டிடத்தில் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து புகை வருவதை காட்சிகள் காட்டுகின்றன.
கட்டிடம் முழுவம் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். குறிசூட்டு துப்பாக்கியுடன் காவல்துறையினர் கூரைகளிலிருந்து குறிவைத்தனர்.
ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து 57 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.
சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் கைது செய்யப்பட்வரின் தாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.