அநுராதபுரம் ஜெயந்தி மாவத்தையில் அமைந்துள்ள விகாரைக்கு உரித்தான அறை ஒன்றை வாடகைக்குப் பெற்று அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 300,000 ரூபா பெறுமதியான காலணிகள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல், மீ கொல்ல, ஹிந்தகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் இணைந்து பாதணிகளை தயாரித்து அநுராதபுரம் பகுதியில் உள்ள நபரொருவரிடம் விற்பனைக்காக ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் ஜெயந்தி மாவத்தையில் அமைந்துள்ள விகாரை ஒன்றில், காலணிகளின் உரிமையாளர் அறையொன்றை வாடகைக்கு எடுத்து பாதணிகளை சேமித்து வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 8 ஆம் திகதி இரவு குறித்த அறையின் சாவியை காலணி விற்பனை செய்யும் நபரிடம் உரிமையாளர் கொடுத்துவிட்டு குருணாகல் பகுதிக்குச் சென்ற போதே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.