தமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி மண்டபம் நிறைந்த மக்களுடன் , தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து உறவுகளின் நினைவாக சென்ற சனிக்கிழமை அன்று பேர்லின் மாநகரத்தில் விடுதலை மாலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட வணக்க நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு , சிறப்பாக அமைக்கப்பட்ட தூபிக்கும் மாமனிதர் சாந்தன் அவர்களின் திருவுருவப் படத்துக்கும் மலர் தூவி சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது .மாமனிதர் சாந்தன் அவர்களின் நினைவுரைகளும் பகிரப்பட்டு, சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரைகளுடன், சிறுவர்களின் எழுச்சி நடனங்களும் அதேவேளையில் எழுச்சிப் பாடலுடன், கவிதை , நாடகம் என அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அரங்கேறியது.
நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரைகளுடன், சிறுவர்களின் எழுச்சி நடனங்களும் அதேவேளையில் எழுச்சிப் பாடலுடன், கவிதை , நாடகம் என நிகழ்வுகளும் சிறப்பாக அரங்கேறியது.
விடுதலை மாலை நிகழ்வில் தாயகத்திலிருந்து திரு ஜெரா அவர்களின் “நிலமிழந்த கதைகள்” எனும் நூல் வெளியிடப்பட்டதோடு நிலத்திற்கும் மக்களுக்குமான தொடர்பும் நில அபகரிப்பின் வலியையும் மண்டபத்தில் சங்கமித்த மக்களின் மனங்களில் உணரக்கூடியதாக காட்சியளித்தது. தாயகத்தில் நடைபெறும் காணி அபகரிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகள், இப்பிரச்சினைகள் பற்றி பேசுகின்ற தொகுப்புதான் நூல் ஆசிரியர் ஜெரா அவர்களின் ‘நிலமிழந்த கதைகள்’.
புலம்பெயர்ந்து பிறந்தாலும், வாழந்தாலும் தமது வேர்களை தேடும் பயணத்தை இவ் நிகழ்வில் அரங்கேறிய சிறார்களின் எழுச்சி ஆக்கங்களிலிருந்து காணக்கூடியதாக அமைந்தது. தாயக உறவுகளின் சுதந்திர வாழ்வுக்காக , அவர்களின் இருப்புக்காக தொடர்ந்தும் ஓர்மத்துடன் சற்றும் சளைக்காமல் குரல்கொடுப்போம் என்று உறுதியெடுத்துக் கொண்டு விடுதலை மாலை நிறைவுபெற்றது.