தெஹிவளை பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு மற்றுமொருவரை படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 பேரும் மீண்டும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெஹிவளை, ஆஸ்பத்திரி வீதிப் பகுதியில், இரண்டு பேரை தாக்கி ஒருவரைக் கொலை செய்து, மற்றும் ஒருவரை படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இந்த 14 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்கிஸ்ஸ படோவிட பிரதேசத்தை சேர்ந்த தில்ஷான் ரங்க குமார என்ற 27 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.