தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தவரும் சிறந்த ஊடகருமான திரு.Trevor R. Grant அவர்கள் 6.2.2017 திங்கட்கிழமை காலமானார்.

294 0

தமிழின ஆதரவாளரும் “Sri Lanka’s Secrets” என்ற நூலின் மூலம் சிங்கள இனவெறி அரசின் முகத்திரையைக் கிழித்தவரும் அவுஸ்திரெலியாவில் தனி மனிதனாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தவரும் சிறந்த ஊடகவியலாளருமான திரு.Trevor R. Grant அவர்கள் இன்று புற்று நோயால் சாவடைந்துள்ளார்.

ஒரு கிரிக்கெட் வீரரான இவர் பின்னர் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்வைத் தொடங்கினார். சிறிது காலம் தனது தொழிலில் விலகியிருக்க வேண்டிய நிலையேற்பட்ட போது ஏதிலிகள் தங்கியிருந்த இடங்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் பார ஊர்திச் சாரதியாகப் பணியாற்றிய போது ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் துன்பங்களைக் கேட்டு மனம் கலங்கி படிப்படியாக தன்னை ஒரு தமிழீழ ஆதரவாளராக மாற்றிக் கொண்டவர்.

சிறி லங்கா அரசின் இனப்படுகொலையை நிறுத்த சர்வதேச அரங்கில் ஒரு விழிப்புணர்வையேற்படுத்த வேண்டுமாயின் தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசு ஆட்சியிலிருந்த போது அதன் கிரிக்கெட் அணி தடை செய்யப்பட்டது போன்று சிறி லங்கா கிரிக்கெட் அணி தடை செய்யப்பட வேண்டுமென “Boycott Sri Lankan Cricket” என்ற கோசத்துடன் போராடி வந்தவர்.

சிறி லங்காவின் மனித உரிமை மீறல்களை வெளிக் கொண்டு வர கிரிக்கெட் கலைச் சொல்லைக் கொண்டு “Human Rights is Not A Silly Point” என்ற மக்கள் எதிர்ப்பையும் ஒழுங்கமைத்துப் போராடியவர்.

மிகவும் அற்புதமான ஒரு மனிதரை தமிழினம் இழந்து விட்டது.தமிழ் மக்களுக்கு அவர் ஆற்றிய பணிக்காக நன்றிகளையும் இதய பூர்வமான அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சிறிலங்காவின் தொடரும் இனப்படுகொலை பற்றி மறைந்த திரு.றெவர் ஆர் கிறான்ட் அவர்கள் #நல்லாட்சி அரசு அமைக்கப்பட்ட பின்னர் வழங்கிய நேர்முகம் கீழுள்ள இணைப்பில்.
https://m.facebook.com/story.php…