தற்போது சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற தாதிக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றியமைத்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகள் குழவொன்றை நியமிப்பதற்கு 2023-03-01 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த அதிகாரிகள் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு, இலங்கை தேசிய தாதிப் பல்கலைக்கழகத்தை தாபிப்பதற்காக கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்கும், அதற்கான சட்டமூலம் ஒன்றை தாரிப்பதற்கும் பதில் கல்வி அமைச்சராக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.