பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார்.
தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜரானபோது, அவர் கைது செய்யபபட்டார் என இம்ரான் கானின் பிரிஐ கட்சிப் பிரமுகர் பவாத் சௌத்ரி தெரிவித்துள்ளர்.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அல் காதிர் நம்பிக்கை நிதிய வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார் என இஸ்லாமாபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனக்கு எதிரான வழக்குகளில் முன்பிணை கோருவதற்காக இம்ரான் கான் இன்று இஸ்லாமாபாத் மேல்நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார். அங்கு துணை இராணுவப் படையினரால் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.