சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் சுவிஸ்- தாயக உணவுக் கண்காட்சியும் பிரமாண்டமான கலைநிகழ்வும்.

371 0

அற்றார் அழி பசி தீர்த்தல் 2023
சுவிஸ் நாட்டில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் அறக் கட்டளையினால் வருடா வருடம் நடாத்தப்படும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வானது முகமாலை சிவபுர வளாக வளர்ச்சி நிதிக்காக ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) தாயக உணவுக் கண்காட்சியும் பிரமாண்டமான கலைநிகழ்வும் நடைபெற்றது.

மதியம் 11.00 மணிக்கு தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த அன்பேசிவ பிரமுகர்களும் சுவிஸ் நாட்டின் முதன்மைச் செயற்பாட்டாளர்களும் மங்களவாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடைசூழ பிரமாண்டமான உணவுக்கண்காட்சி நாடா வெட்டி திறந்துவைக்கப்பட்டது.

இவ்நிகழ்வில் 2000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். சைவத் தமிழ்ச் சங்க தொண்டர்களின் சிறந்த முறையிலான பணியில் 150 மேற்பட்ட அறுசுவை உணவு வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. உணவுக் கண்காட்சி நிலையங்கள் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு அவ்நிலையங்களில் பல உணவுகள் நேரடியாக உடனுக்குடன் தொண்டர்களினால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 13.00 மணியளவில் மண்டபம் நிறைந்த மக்களோடு மாபெரும் கலைநிகழ்வு ஆரம்பமானது. மங்களவிளக்கேற்றல், ஈகைச்சுடரேற்றல், சென்றாண்டு சிவபதம் அடைந்த இரகுநாதகுருக்கள் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வு ஆரம்பமானது.

சுவிஸ் நாட்டின்; முதன்மை கலை ஆசிரியர்களுடைய மாணவர்களின் பரதநாட்டியத்தோடு சுவிஸ் நாட்டில் வாழும் இளம் கலைஞர்களின் தாள இசைக்கச்சேரியும், கனடா நாட்டில் வாழும் ஈழம் தந்த சின்ன குயில் சிம்மயியுடன் சுவிஸ் தமிழீழ இசைக்குழவினரின் இசை நிகழ்வுடன் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.