இலங்கையில் ஆபத்தாக மாறும் டெங்கு நோயாளர்கள்!

84 0

நாட்டில் மே மாதம் முதல் வாரத்தில் இலங்கையில் 1896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த மாதத்தின் இறுதி வாரத்துடன் ஒப்பிடுகையில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கம்பஹா போன்ற அதிக நோயாளர்கள் பதிவாகும் மாவட்டங்களுக்கு நிதியளித்து விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் தமது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.