யுத்தத்தை வென்றெடுத்த படையினருக்கு தண்டனை வழங்க தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
புளத்சிங்கள பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை வென்றெடுத்த படையினருக்கு இன்னல் ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், படையினருக்கு இன்னல் விளைவிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் தாக்குதல், பொது மக்களுக்கு இன்னல் விளைவித்த மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட படையினரை பாதுகாக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது.
ஆனால், யுத்தத்தில் பங்கேற்ற படையினரை அரசாங்கம் பாதுகாக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.