ஹிக்கடுவை இஸ்ஸோ சுஜியின் இரண்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன!

87 0

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானதாகக் கருதப்படும் இரண்டு தனியார் வங்கிகளில் உள்ள கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டடு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினரால் தடைசெய்யப்பட்டுள்ளன.

ஹிக்கடுவையைச் சேர்ந்த இஸ்ஸோ சுஜி என அழைக்கப்படும் குணரத்ன சுஜித் சில்வாவின் வங்கிக் கணக்குகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாணந்துறை மற்றும் தென் மாகாணத்தை மையமாக கொண்டு துபாய் நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நபரின் கணக்குகளே  இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான 4 மாத காலப்பகுதியில் குறித்த பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த கணக்குகளில் 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.