டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

92 0

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கத் தொடங்கியதில் இருந்தே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. அடுத்தடுத்த நகர்வுகளில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பின்னர், பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை. இதனால் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவுடன, அதிமுக முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் கைவசம் சென்றுள்ளது. சட்டப்போராட்டத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்ததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்திவந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவி தினகரனை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.