சேகுவேராவை கைதுசெய்த இராணுவ அதிகாரி காலமானார்

87 0

கியுபபுரட்சியாளர் சேகுவேராவை  கைதுசெய்த பொலிவிய ஜெனரல் காலமானார்.

சேகுவேராவை கைதுசெய்ததன் மூலம் தேசிய நாயகனாக மாறிய கரி பிரடோ சல்மன் 84 வயதில் காலமானார்

அமெரிக்காவின் ஆதரவுடன் 1967 இல் பொலிவியாவில் கரிபிரடோ சல்மன் முன்னெடுத்த இராணுவநடவடிக்கையே இடதுசாரிகளின் புரட்சியை அந்த நாட்டில் ஒடுக்கியது.

அக்காலப்பகுதியில் பொலிவியாவில் வலதுசாரி இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியிலிருந்தனர்.

சேகுவேராவை கைதுசெய்த இராணுவ அதிகாரியொருவர் அவரை சுட்டுக்கொன்றார்.

அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் பனிப்போர் உச்சத்திலிருந்த அந்த காலப்பகுதியில் சேயின் நடவடிக்கைகள் குறித்தும் இலத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகளின் செல்வாக்கு குறித்தும் அமெரிக்கா கவலை கொண்டிருந்தது.

1959ம் ஆண்டு கியுப புரட்சியின் வெற்றியின் பின்னர் ஏனைய நாடுகளில் கெரில்லா இயக்கங்களை முன்னெடுப்பதற்காக சேகுவேரா அங்கிருந்து வெளியேறினார்.

பிடல்கஸ்டிரோவின் நெருங்கிய நண்பரான சே சர்வதேச அளவில் இடதுசாரிகளின் கதாநாயகனாக மாறினார்.

ஜெனரல் பிராடோவின் மகன் தனது தந்தையை அசாதாரண நபர் என விவரித்துள்ளார்.

தனது தந்தை அன்பு நேர்மை மற்றும் தைரியம் ஆகியவற்றின் பாராம்பரியத்தை விட்டுச்சென்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேகுவேராவை சுட்டுக்கொன்ற பொலிவிய இராணுவ அதிகாரி மரியோ டெரன் கடந்தவருடம் உயிரிழந்தார்.

சேயின் குழுவினரை ஒழித்தமைக்காக ஜெனரல் பிராடோ பொலிவியாவின் இராணுவ ஆட்சியாளர்களை காப்பாற்றிய தேசிய வீரர் என கருதப்பட்டார்.

 

பொலிவியாவில் தொலைதூரத்தில் உள்ள வனப்பகுதியில் மறைந்த சே குழுவினருக்கு எதிரான நடவடிக்கைகளிற்கு  பிராடோ தலைமை தாங்கினார்.

தவறுதாக துப்பாக்கிகுண்டொன்று முதுகெலும்பை தாக்கியதை தொடர்ந்து சக்கரநாற்காலியை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு பிராடோ தள்ளப்பட்டார்.

நான் எப்படி சேகுவேராவை  கைதுசெய்தேன் என அவர் நூல் ஒன்றை எழுதினார்.