தென்கொரியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்க கோழிகளுக்கு தடை

288 0

அமெரிக்காவில் இருந்து தென் கொரியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கோழிகளுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து கோழிகளை ஏற்றுமதி செய்யும் பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு தென்கொரிய கோழி பண்ணைகளில் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டதை அடுத்து 24 மணி நேரத்தினுள் 15 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.

இதன் காரணமாக ஏற்பட்ட தட்டுப்பாட்டை நீக்கும் நோக்கிலேயே அமெரிக்காவில் இருந்து கோழி மற்றும் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன.

இந்த நிலையில், அமெரிக்க ஏற்றுமதி தடை நேற்று முதல் அமுலுக்கு வரும் நிலையில் மாற்று நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.